கண்ணாடி உடைந்தால் என்ன அர்த்தம்? வாஸ்து சொல்வது இதுதான்! வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் கண்ணாடி உடைவது வாஸ்து தோஷத்தின் முக்கிய அறிகுறியாக கருதப்படுகிறது சிலர் கண்ணாடி உடைவதை ஒரு நல்ல சகுனமாகவும், வாழ்க்கையில் நல்ல நிகழ்வுகளின் தொடக்கத்தின் அடையாளமாகவும் கருதுகின்றனர் இந்து பாரம்பரியத்தின் படி, கண்ணாடி உடைவது வீட்டில் மங்களகரமான விஷயங்கள் நடக்க போவதை குறிக்கிறது எதிர்காலத்தில் வரப்போகும் பொருளாதார மீட்சிக்கான அறிகுறியாக அவர்கள் கருதுகின்றனர் கண்ணாடி உடைவது செல்வம், செழிப்பு மற்றும் ஐஸ்வர்யத்தின் அடையாளம் என்று சிலர் நம்புகிறார்கள் வாஸ்து சாஸ்திரத்தில், கதவுகள் அல்லது ஜன்னல்களின் கண்ணாடிகள் உடைவது பெரும்பாலும் ஒரு நல்ல அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது வட்டமான, நீள்வட்டமான கண்ணாடிகளை வீட்டில் வைக்க வேண்டாம். இது நேர்மறை ஆற்றலை வரவிடாது. வீட்டில் எப்போதும் சதுரக் கண்ணாடிகளை வைத்திருங்கள் கண்ணாடியை மேற்கு அல்லது தெற்கு சுவரில் வைக்கக்கூடாதாம்