துளசி இலையால் அர்ச்சனை! துளசீஸ்வரர் கோயிலுக்கு எப்படி செல்வது?

Published by: பிரியதர்ஷினி

தமிழ் மாதங்களில் மிகவும் முக்கியமான மாதங்களில் ஒன்றான ஆவணி மாதம் இன்று பிறந்துள்ளது. நரியை பரியாக்கியது. கருங்குருவிக்கு உபதேசம் என ஆவணி மாதத்தில் சிவ பெருமானின் திருவிளையாடல்கள் பல அரங்கேறிதாக புராணங்கள் கூறுகிறது

தனித்துவம் வாய்ந்த சிவாலயங்களுக்கு செல்வது கூடுதல் சிறப்பு என்று கூறப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வில்வவன நாயகி சமேத துளசீஸ்வரர் கோயில் தனிச்சிறப்புகள் வாய்ந்தது ஆகும்

பொதுவாக சிவாலயங்களில் வில்வ இலைகளை கொண்டு அர்ச்சனை செய்யப்படுவது வழக்கம் ஆகும். ஆனால், இந்த கோயிலில் மட்டும்தான் துளசி இலை கொண்டு அர்ச்சனை செய்யப்படுகிறது

தமிழ்நாட்டிலே துளசியால் சிவ பெருமானுக்கு அர்ச்சனை செய்யப்படும் ஒரே கோயில் இந்த சிவாலயம் மட்டுமே ஆகும். இந்த கோயிலில் உள்ள லிங்கம் 5 அடி உயரம் கொண்டது ஆகும்

சிவபெருமான் – பார்வதி தேவி திருமணத்திற்காக தேவர்கள், அசுரர்கள் என குவிய, பூமியின் சமநிலையை சரி செய்ய அகத்தியரை மறு திசைக்கு சிவபெருமான் அனுப்பினார். அப்போது, 108 லிங்கங்களுக்கு அகத்தியர் பூஜை செய்தார்

அப்போது, ஒரு தடாகத்தை அமைத்து கொன்றை மலர் மற்றும் துளசி கொண்டு சிவபெருமானை அகத்தியர் பூஜித்தார். அவரது வழிபாட்டால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் துளசீஸ்வரராக அர்த்தநாரீஸ்வர வடிவத்தில் காட்சி தந்ததாகவும், அதன் காரணமாக இந்த கோயிலில் துளசி கொண்டு அர்ச்சனை செய்யப்படுவதாகவும் கோயில் வரலாறு கூறுகிறது

சுமார் 1000 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் விக்ரம சோழன் காலத்தில் கட்டப்பட்டது ஆகும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்திருந்தாலும், சென்னைவாசிகளுக்கும் இந்த கோயில் அருகில் உள்ளது. சிங்கபெருமாள் கோயில் – வல்லக்கோட்டை செல்லும் பாதையில் அமைந்துள்ளது கொளத்தூர் என்ற கிராமம்

தமிழ்நாட்டிலே துளசி இலையால் அர்ச்சனை செய்யும் ஒரே சிவாலயமான இந்த துளசீஸ்வரர் கோயிலுக்கு சென்றால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை என்பது குறிப்பிடத்தக்கது