படிக்கட்டு வாஸ்து: செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் வடக்கு திசையில் இருந்து தெற்கு நோக்கியோ அல்லது கிழக்கு திசையில் இருந்து மேற்கு நோக்கியோ மேலே செல்வது போல படிக்கட்டுகள் கட்ட வேண்டுமாம் வாஸ்து சாஸ்திரப்படி வீட்டின் உள்ளே மாடிப்படிக்கட்டுகள் எவ்வாறு கட்ட வேண்டும் என்பதை பார்க்கலாம் வீட்டில் படிக்கட்டுகள் என்பது மிக மிக முக்கியமானதாக கருதப்படுகிறது வீட்டிற்கு உள்ளே மாடிப்படிக்கட்டுகளை அமைக்கும்போது தெற்கு அல்லது மேற்கு பகுதிகளில் அமைக்கக்கூடாதாம் அதற்கு மாறாக வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு திசை சுவர்களை ஒட்டியவாறு அமைக்கலாம் வாஸ்து சாஸ்திரப்படி மாடிப்படிக்கட்டுகளானது ஒருவர் வாழ்க்கையில் முன்னோக்கிச் செல்லும் வெற்றிப்படிக்கட்டுகளாக கருதப்படுகிறது அதாவது லாபம் – நஷ்டம் – லாபம் கணக்குப்படி 11, 13, 15, 17 அல்லது 19 படிக்கட்டுகள் இருப்பது நல்லது ஆகும் இந்த எண்களில் மாற்றம் இருந்தாலும் ஒற்றை இலக்கத்தில் படிக்கட்டுகளை அமைக்குமாறு பார்த்துக் கொள்ளலாம்