தம்பதிகளே! தாலி பிரித்துக் கோர்க்க நல்ல நாள் எது தெரியுமா ?

Published by: ABP NADU

தாலிக் கயிற்றை நாம் அடிக்கடி மாற்றக்கூடாதாம்

கயிறு பழுதாகி மங்கும் தன்மை வந்தால் மட்டுமே அதனை மாற்ற வேண்டும்

தாலிக்கயிற்றை வருடத்திற்கு இரண்டு முறை மாற்றிக்கொள்ளலாம்

நாம் திருமாங்கல்யத்தை பிரம்ம முகூர்த்தமான அதிகாலை வேளையில் மாற்றுவது நல்லதாம்

பெண்கள் காலையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து தம் கழுத்தில் உள்ள பழைய தாலிக்கயிற்றை மாற்றவெண்டுமாம்

தாலிக்கயிற்றை நாம் திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளில் மட்டும்தான் மாற்ற வேண்டுமாம்

பெண்கள் தினமும் அந்தத் தாலிக் கயிற்றுக்கு மஞ்சள் தேய்த்து குளிப்பார்கலாம்

தாலிக்கயிற்றில் இருக்கும் மஞ்சள் பெண்களின் மார்பகத்தில் எந்த ஒரு நோயும் அண்ட விடாமல் தவிர்க்கும்மாம்

திருமாங்கல்யத்திற்கு குங்குமப் பொட்டை வைத்துக்கொள்ளும்போது காயத்ரி மந்திரத்தை சொல்லுவது மிகவும் நல்லதாம்

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அவரது தாலி கயிற்றையோ அல்லது தங்கத்தால் ஆன தாலி சரடையோ மாற்றக்கூடாதாம்

பழைய கயிற்றை வீட்டின் அருகில் உள்ள நீர் நிலைகளில் போட வேண்டுமாம்

திருமாங்கல்யத்தை மாற்றிய தினத்தன்று ஏதாவது ஒரு அம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டு வருவது நல்லதாம்