பணக்கஷ்டத்தை தீர்க்கும் வரலட்சுமி பூஜை ! வீட்டில் செல்வம் செழிக்க, வீட்டில் இருப்பவர்கள் ஆரோக்கியத்துடன் இருப்பதற்காக வரலட்சுமி பூஜை செய்யப்படுகிறது நடப்பாண்டில் வரலட்சுமி பூஜை வரும் ஆகஸ்ட் 16ம் தேதி கொண்டாடப்படுகிறது ஆடி மாத கடைசி வெள்ளியில் வரும் இந்த வரலட்சுமி விரதம் மிகுந்த சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது வரலட்சுமி பூஜையை வியாழன், வெள்ளி, சனி என்று மூன்று நாட்கள் செய்யலாம் பெரும்பாலான வீடுகளில் பெண்களே இந்த பூஜையை செய்கின்றனர் வரலட்சுமி பூஜை படத்தை வைத்து மட்டுமின்றி கலசத்தை வைத்தும் செய்யப்படுகிறது கலசத்தின் உள்ளே வைத்திருக்கும் நாணயத்தை வீட்டின் பீரோ, பணம் சேகரிக்கும் பெட்டகத்தில் வைப்பது நல்லது ஆகும் வரலட்சுமி பூஜை செய்யும் நேரத்தில் தாலிச்சரடு மாற்றிக் கொள்ள விரும்பும் பெண்கள் மாற்றிக் கொள்ளலாம் கலசத்தில் வைக்கப்பட்ட பொருட்களை சமையலுக்கு பயன்படுத்துவதுடன், கலசத்தில் வைத்த அரிசியை சர்க்கரை பொங்கல் செய்வதும் நல்லது ஆகும்