ஆவணியில் இத்தனை பண்டிகைகளா? தமிழ் மாதங்களில் மிகவும் முக்கியமான மாதம் ஆவணி மாதம் ஆகும் பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த மாதம் வரும் ஆகஸ்ட் 17ம் தேதி பிறக்கிறது ஆவணி பிறக்கும் 17ம் தேதியான சனிக்கிழமை சிவபெருமானுக்கு உகந்த பிரதோஷ நன்னாள் ஆகும் இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி மிகவும் முக்கியமான பண்டிகை ஆகும் நடப்பாண்டிற்கான விநாயகர் சதுர்த்தி வரும் செப்டம்பர் மாதம் 7ம் தேதி வருகிறது. அதாவது, ஆவணி மாதம் 22ம் தேதி வருகிறது கிருஷ்ண ஜெயந்தி நன்னாள் வரும் ஆகஸ்ட் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதாவது, ஆவணி மாதம் 10ம் நாளில் கிருஷ்ண ஜெயந்தி வருகிறது வீடுகளில் உள்ள குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் தரித்து பெற்றோர்களும், உறவினர்களும் வீடுகளில் நடக்க வைத்து அழகு பார்ப்பார்கள் மலையாள மக்களின் மிகப்பெரிய பண்டிகையாக ஓணம் உள்ளது நடப்பாண்டிற்கான ஓணம் பண்டிகை வரும் செப்டம்பர் மாதம் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் 29ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது