ஆண்டாள் திருக்கல்யாணம் ஏன் விசேஷமாக கொண்டாடப்படுகிறது? ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரமே ஆடிப்பூரமாக பக்தர்களால் வழிபடப்படுகிறது நடப்பாண்டிற்கான ஆடிப்பூரம் ஆகஸ்ட் 7ம் தேதி( நாளை) கொண்டாடப்படுகிறது ஆடிப்பூரம் வைணவ தலங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது பன்னிரு ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண் ஆழ்வார் ஆண்டாள் இந்த ஆடிப்பூர நன்னாளிலே ஆண்டாள் அவதரித்தாக புராணங்கள் கூறுகிறது ஆடிப்பூர நன்னாளில் ஸ்ரீரங்கநாதர் - ஆண்டாள் திருக்கல்யாணம் கோலாகலமாக கோயில்களில் நடக்கிறது ஆண்டாள் திருக்கல்யாணத்தில் பங்கேற்று வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது ஆடிப்பூரத்தை முன்னிட்டு அனைத்து வைணவ மற்றும் சைவ தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்