ஃப்ரெஷான நாளை ராசிபலன்களுடன் தொடங்குங்கள்!

Published by: ABP NADU
Image Source: Pixabay

1. மேஷம்

வியாபாரத்தில் இழுபறியான சூழல் அமையும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும்.

2. ரிஷபம்

நீண்ட நாள் பிரச்சனைகளுக்கான தெளிவுகள் கிடைக்கும். வாக்குறிதிகள் அளிக்கும்போது சிந்தித்துச் செயல்படவும்.

3. மிதுனம்

சேமிப்பு குறித்த சிந்தனைகள் மேம்படும். பணி நிமித்தமான செயல்களில் கவனம் வேண்டும்.

4. கடகம்

எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். அலங்கார விஷயங்களில் ஈர்ப்புகள் ஏற்படும்.

5. சிம்மம்

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். முயற்சிக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும்.

6. கன்னி

தடைப்பட்ட சில வேலைகள் நிறைவு பெறும். வியாபார நிமித்தமான சிந்தனைகள் மேம்படும்.

7. துலாம்

வியாபாரத்தில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். சுபகாரிய முயற்சிகள் ஈடேறும்.

8. விருச்சிகம்

பணிகளில் திறமைக்கான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.

9. தனுசு

உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் ஏற்படும். புதிய அறிமுகம் மூலம் மாற்றம் பிறக்கும்.

10. மகரம்

கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும்.

11. கும்பம்

மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். உத்தியோகத்தில் அலைச்சல்கள் ஏற்படும்.

12. மீனம்

நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூர் சார்ந்த பயணங்களால் அனுபவம் அதிகரிக்கும்.