விஜய்யின் நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் பீஸ்ட்



இந்த படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து செம வைரலனது



அனிருத் - ஜோனிடா காந்தி குரலில் அரபிக் குத்து பாடப்பட்டது



சிவகார்த்திகேயன் இந்த பாடலை எழுதினார்



வித்தியாசமான வரிகளை கொண்ட இப்பாடல் பெரும்பாலோரின் ரிங்-டோனாக மாறியது



அத்துடன் இப்பாடலில் இடம்பெற்ற நடன அசைவுகளும் பெரும் கவனத்தை ஈர்த்தது



தற்போது ஹலமத்தி ஹபிபோ பாடல் 500 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது



இந்த செய்தியை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது



அதிக பார்வைபெற்ற தமிழ் பாடல்களின் பட்டியலில் ரவுடி பேபி முதல் இடத்தை பிடித்துள்ளது



அதற்கு அடுத்ததாக அரபிக் குத்து பாடல் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது