ஆக்டோபஸ் போல் இருக்கும் இந்த மீன் கடம்பா மீன்/கனவா மீன் என அழைக்கப்படுகிறது சுவையாக இருக்கும் இந்த கடம்பா மீனில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன இந்த மீனில் கலோரிகள் மிகவும் குறைவாக இருக்கும் இதில் புரதம் நிறைந்து காணப்படுகிறது இதில் கொஞ்சம் கூட கார்போஹைட்ரேட், கொலஸ்ட்ரால் கிடையாது கீட்டோ டயட்டை மேற்கொள்பவர்கள், இதை டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம் இதில் வைட்டமின் பி12, பி6 ஆகியவை உள்ளன இதில் இருக்கும் செலினியம், வைட்டமின் ஈ உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட், புற்றுநோயை எதிர்த்து போராடலாம் ப்ரெஷ்ஷாக இருக்கும் கடம்பா மீனையே நன்றாக சுத்தம் செய்து சமைக்க வேண்டும்