புலி (பாந்தெரா தீகிரிஸ்), என்னும் பூனையினத்தைச் சேர்ந்ததாகும்.

பாந்தெரா வகை பூனையினங்களில் புலியே மிகப் பெரியதாகும்.

இது உயர்நிலை ஊனுண்ணியும், ஆதிக்கமிக்க ஊனுண்ணியும் ஆகும்.

கிழக்காசிய நாடுகளில் புலியே காட்டின் அரசன் என்று சொல்லப்படுகிறது.

ஒருமுறைக்கு 3-லிருந்து 4 குட்டிகளை ஈனும்.

புலிகள் தனிமையாக வாழும் பழக்கம் உடையது.

புலிகள் அனைத்துவித பருவநிலை காலங்களிலும் வாழும் தன்மை கொண்டது.

புலிகள் பெரும்பாலும் மான்களை விரும்பி சாப்பிடும். தண்ணீரில் நீந்தும் தன்மையுடையதால், நீருக்குள்ளும் வேட்டையாடும்.

புலிகளின் இனப்பெருக்க மாதங்கள் நவம்பர்- ஏப்ரல்.

உடல் முழுவதும் வெள்ளை மற்றும் கருப்பு நிற கோடுகள் விரவி கிடக்கும்.