உலகின் இரண்டாவது மிக நீளமான ஆறு. இதன் நீளம் 6,760 கிலோ மீட்டர்.

நதிகளில் மட்டும் வாழும் டால்பின்களான பிங்க் டால்பின் என்றழைக்கப்படுவதன் வாழ்விடம் இதுதான்.

அமேசான் ஆற்றில் மட்டும் 2,000 மீன் வகைகளில் வாழ்விடமாக இருக்கிறது.

உலகிலேயே நன்னீரால் சூழப்பட்ட மிகப் பெரிய தீவு அமேசான் ஆற்றுப் பகுதியில் உள்ள மராஜோ.

அமேசான் நதி பிரேசில், கொலம்பியா, பெரு, வெனின்சுலா ஆகிய நாடுகளில் பாய்கிறது.

இதயத்துக்குள் ஓடும் நரம்புகளைப் போல, வெப்பமண்டல மழைக்காட்டுக்குள் இந்த ஆறு பாய்கிறது. அதுவே, அமேசான் காடு.

தென்அமெரிக்கா கண்டத்தில் பிரேசில் நாட்டில் ஆன்டிஸ் மலைத் தொடரில்
உற்பத்தியாகி அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது.

அமேசான் நதியை சுற்றி இருப்பதால் அமேசான் காடுகள் என பெயர் வந்தது. இதுவே உலகின் பெரிய மழைக்காடு.

இதன் 60% பகுதி பிரேசிலில் உள்ளது.பெரு 13 % கொலம்பியாவில் 10% பாய்கிறது. வெனிசுலா, பிரஞ்சு கயானா, பொலிவியா உள்ளிட்ட நாடுகளில் சிறிய அளவில் உள்ளன.

அமேசானுக்கு 1,100க்கும் மேற்பட்ட துணை நதிகள் உள்ளன.

ரியோநெக்ரோ, கைனியா, மரோனா, ஜாபுரா, காகுடா, உகேயாலி, புருஸ், டாபஜோஸ், சிங்கு போன்றவை முக்கியமான துணை நதிகள்.