நினைத்தாலே நாக்கில் உமிழ்நீரை வரவழைக்கும் சக்தி படைத்த உணவு பிரியாணி..!



இந்தியர்களுக்கு மிகவும் பிடித்துப்போன பிரயாணியின் தாயகம் இந்தியா கிடையாது..!



பிரியாணி என்னும் சொல் வறுத்த என்ற பொருள் தரும் பாரசீகச் சொல்லில் இருந்து வந்தது.!.



பிரியாணி சமைக்கும் முறை பாரசீகத்தில் தோன்றி அந்நாட்டு வணிகர்கள், உலகம் சுற்றுவோர் மூலம் தெற்காசியாவுக்கு வந்தது..!



இன்று நாம் பிரியாணியைச் சமைக்கும் முறை இந்தியாவிலேயே உருவானது..!



மசாலாப் பொருட்களுடன் முட்டை, மற்றும் ஆடு, மாடு, கோழி இறைச்சி, மீன் அல்லது காய்கறிகள் சேர்த்து சமைக்கும் உணவு பிரியாணி..!



ஆம்பூர் பிரியாணி, திண்டுக்கல் பிரியாணி, தலச்சேரி பிரியாணி என பிரயாணிகள் பல வகைகளாக உள்ளன..!



திருமணங்களில் பரிமாறப்படும் பிரியாணி திருமண பிரியாணி எனப்படுகிறது..!



கடந்த ஆண்டு ஆன்லைன் உணவு விநியோக ஆப்களில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு பிரியாணி தான்..!



உலக பிரியாணி நாளில் ஒரே ப்ளேட் பிரியாணி ஆர்டர் செய்யுங்க பாஸ்..!