எதையும் சொந்தமாக்கி கொள்ளும்
எண்ணம் இல்லை
உன் அன்பை தவிர...



அகதியாக நான்
அகப்பட்டு கொண்டேன்
உன் இதய தேசத்தில்...



தெளிவற்ற நிலையிலும்
தெளிவான உன் ஞாபகங்கள்....



தேடவில்லை என்று வருந்தாதே
உன்னை தொலைத்தால் தானே தேடுவதற்கு...



எந்த மலரிலும்
உணரவில்லை
நீ கொடுத்த இந்த....
பூவின் நறுமணத்தை




ஒற்றை
முத்தத்தில்
அரங்கேற்றினான்
மொத்த....
ஆசைகளையும்


உன்னருகில்
மௌனம்
பேரழகு...




காத்திருப்பும்
சுகமே
உன் வரவுக்காக
என்பதால்



உன்னை புரிந்துக்கொண்ட
போதுதான் என்னுள்
உள்ள பிழைகளை உணர்ந்தேன்...



பல மாயங்கள்
செய்கின்றாய்
விழிகளுக்குள்....
மாயக் கண்ணனாய்