தமிழில் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ திரைப்படம் மூலம் அறிமுகமான பூர்ணா அதன்பிறகு தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து தென்னிந்திய நடிகையாக மாறினார் தலைவி மற்றும் த்ரிஷ்யம் 2 போன்ற படங்களில் சிறப்பாக நடித்தார். இந்தநிலையில், பிரபல நடிகை பூர்ணாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த தொழிலதிபருக்கும், அவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது நிச்சயதார்த்த விழா புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பூர்ணா ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த தொழிலதிபர் ஷானித் ஆசிப் அலியுடன் பூர்ணா நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இதுதொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில், ‘குடும்பத்தின் ஆசீர்வாதத்துடன், நான் எனது அடுத்த வாழ்க்கைப் பகுதிக்கு அடியெடுத்து வைக்கிறேன். இப்போது அது அதிகாரப்பூர்வமானது” எனப் பதிவிட்டுள்ளார். நடிகை செய்தியைப் பகிர்ந்தவுடன், நண்பர்களும் ரசிகர்களும் வாழ்த்துச் செய்திகளை அனுப்பு வருகின்றனர்