ஆண்ட்ராய்டு மொபைலில் ஸ்டோரேஜ் ஸ்பேஸை ஃப்ரீயாக வைப்பது எப்படி தெரியுமா? முதலில் நம்முடைய மொபைலில் பயன்படுத்தப்படாத செயலிகளை நீக்க வேண்டும். இந்த தேவையில்லாத செயலிகளை நீக்குவதன் மூலம் மொபைல் போனில் ஃப்ரீ ஸ்பேஸ் கிடைக்கும். மொபைல் போனில் பாடல்களை ஆடியோவாக வைப்பதற்கு பதிலாக மியூசிக் ஸ்டீரீமிங் செயலிகளை வைத்து கொள்ளலாம். உங்கள் மொபைல் போனிலுள்ள தேவையில்லாத படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது அழித்துவிடுங்கள். உங்களுடைய மொபைல் போனிலுள்ள வாட்ஸ் அப் ஸ்டோரேஜை அடிக்கடி சரிப்படுத்து கொள்ளவும். ஏனென்றால் வாட்ஸ் அப் செயலில் சில பெரிய ஃபைல்கள் ஸ்டோரேஜில் இருக்கும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அடிக்கடி உங்களுடைய மொபைல் போனின் ஸ்டோரேஜை சரிப்பார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அடிக்கடி உங்களுடைய மொபைல் போன் ஸ்டோரேஜை சரிபார்க்கவில்லை என்றால் உங்களுடைய மொபைல் போன் மிகவும் மெதுவாக இயங்கும்.