இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான ‘வம்சம்’ படத்தில் அறிமுகமானவர் நடிகை நந்தினி விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் ’மைனா’ கதாபாத்திரத்தில் நடித்தார் இந்தக் கதாபாத்திரம் அவரை பட்டித்தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது அன்று முதல் மைனா நந்தினி என்றே அவரை ரசிகர்கள் அன்புடன் அழைத்து வருகின்றனர் முன்னதாக மைனா திருமணம் செய்துகொண்ட கார்த்திகேயன் என்பவர் தற்கொலை செய்து உயிரிழந்தார் பிறகு சன் டிவியில் ஒளிப்பரப்பான ‘நாயகி’ சீரியலில் நடித்த யோகேஸ்வரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது தொடர்ந்து சமூகவலைதளங்களில் இந்தத் தம்பதி படு ஆக்டிவாக உள்ளனர் சமூக வலைதளங்களில் தங்களது நடவடிக்கைகளை பதிவிட்டு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளனர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரி போட்டியாளராக பங்குபெற்றுள்ளார்