சந்திரமுகி 2-ஆம் பாகம் பி.வாசு இயக்கத்தில் தயாராகி வருகிறது முதல் பாகத்தை பி.வாசுவே இயக்கியிருந்தார் முதல் பாகத்தில் நடிகர் ரஜினியின் நடிப்பு அனைவராலும் ரசிக்கப்பட்டது முதல் பாகத்தின் நாயகி நயன்தாரா வடிவேலுவின் அரண்மனை காமெடி ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்று சந்திரமுகியாக ஜோதிகா அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் இரண்டாம் பாகத்தில் லாரன்ஸ் ஹீரோவாக நடித்து வருகிறார் இசை அமைப்பாளராக மரகதமணி பணிபுரிகிறார் சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது இவர் தலைவி, தாம் தூம் ஆகிய தமிழ் படங்களில் நடித்தவர்