காதலர் பெயரை உளறிய ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்..!



பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி காஃபி வித் கரண்



இந்த நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரீதேவியின் இரண்டு மகள்களான ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் ஆகிய இருவரும் கலந்துகொண்டார்கள்



ஜான்வி மற்றும் குஷி கபூர் தங்கள் இருவருக்கும் இடையில் அக்கா தங்கைக்கான உறவு, தங்களது காதல் பற்றிய பல்வேறு விஷயங்களை பேசினார்கள்



விளையாட்டுத்தனமாக ஜான்வி கபூர் தனது காதலன் ஷிகர் பஹாரியாவின் பெயரை எடுத்து மாட்டிக் கொண்டார்



இது தவிர்த்து ஜான்வி கபூர் தனது அம்மா ஸ்ரீதேவி பற்றி பேசியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது



இளையவளான குஷி கபூர் ஜான்விக்கு மூத்த சகோதரியைப் போல் நடந்துகொள்வார்.” என்று ஸ்ரீதேவி முன்பு ஒரு முறை குறிப்பிட்டிருந்தார்



இதற்கு பதிலளித்த ஜான்வி கபூர், எனக்கும் என் அம்மாவுக்கும் இடையில் விஷயங்கள் மாறியிருக்கின்றன



அம்மா இறந்தபின் சில நேரங்களில் குஷி எனக்கு தாயாகவும் மகளாகவும் நான் அவருக்கு தாயாகவும் மகளாகவும் இருந்து வருகிறோம்” என்றார்



இவர்களது இந்த நேர்காணல் காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது