தட்டான் தட்டான் வண்டிகட்டி
பறந்தேன் கோழி தூவாட்டம்


ஏ சொக்கபன மேல நின்னு
அடிச்சா சூர காத்தாட்டம்


மொட்ட பாறை பூவா வெடிச்சேனே
உச்சி தேன வாரி குடிச்சேனே


என் கைரேகை பாத்த பேச்சி
கத சொன்னாலே நீயே சாட்சி


நா போற வர பாதையில
நெருஞ்சி முள்ள ஒதுக்கும் உன் பார்வை


குதிலுள நெல்லாட்டம் குமியுதே உன் வாசம்
ஆசையா நீ பாக்க சோறு பொங்கும்


தெருவுல போனாலும் புழுதியா வந்தாலும்
தாவணி ராசாவா மாத்த சொல்லும்


சேந்தனலா நெஞ்சிருக்க உன் நெனப்பே தூரல் அடிக்கும்
ஊர் நிழலா நா இருக்க என் நெசமே நீதாண்டி