பிரபல பாடகி “சின்னக்குயில்” சித்ராவுக்கு இன்று (ஜூலை 27) பிறந்தநாள் தமிழில் இளையராஜாவால் நீதானா அந்தக் குயில் படத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார் வெளியான முதல் பாடல் “சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா” ( பூவே பூச்சூடவா) இளையராஜாவை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அதிக பாடல்கள் பாடியுள்ளார் தமிழில் சிந்து பைரவி, மின்சார கனவு, ஆட்டோகிராஃப் ஆகிய படங்களின் பாடல்களுக்காக தேசிய விருது வென்றுள்ளார் தமிழ், மலையாளம், தெலுங்கு உட்பட 14 இந்திய மொழிகளில் பாடியுள்ளார் இந்தியாவில் அதிக முறை தேசிய விருதை வென்ற பாடகி (6 முறை) என்ற பெருமைக்குரியவர் 8 ஃபிலிம்ஃபேர், 36 மாநில அரசு விருதுகளை வென்றுள்ளார் மனோ-சித்ரா தமிழ் சினிமாவின் வெற்றிப் பாடல்களைப் பாடிய ராசியான ஜோடியாகும் எம்.எஸ்.சுப்புலட்சுமி, லதா மங்கேஷ்கர் ஆகியோரை கெளரவப்படுத்தி சிறப்பு இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார்