ஏபிசி ஜூஸ் என்பது ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் கொண்டு செய்யப்படும் பானமாகும் ஏபிசி ஜூஸ் சுவைமிக்க ஊட்டச்சத்து நிறைந்த பானம் ஏபிசி ஜூஸ் செய்ய, ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் எடுத்து கொள்ளுங்கள் பீட்ரூட் மற்றும் கேரட்டின் தோலை நீக்குங்கள் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் ஜூஸரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும் சுவையை கூட்ட இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கலாம் சாற்றை வடிகட்டினால் சுவையான ஏபிசி ஜூஸ் ரெடி இந்த ஜூஸை வாரத்திற்கு இருமுறை குடித்து வந்தால் சரும நிறம் மேம்படலாம் குளிர்காலத்தில் ஏபிசி ஜூஸ் அருந்துவது நல்லது