குளிர்காலம் வந்துவிட்டது. கூடவே வறண்ட சருமமும் வந்துவிடும் தானே. நெல்லிக்கனி குளிர்காலத்தில் உட்கொள்ள ஒரு சிறந்த கனி. இதில் வைட்டமின் சி உள்ளது. ஆன்ட்டி ஆக்சிடன்ட்டுகள் உள்ளன. சிலருக்கு அதை அப்படியே சாப்பிடப் பிடிக்காமல் இருக்கலாம். அவர்கள் நெல்லிக்கனியை ஜாம், ஜூஸ், பொடி வடிவில் சேர்த்துக் கொள்ளலாம். இது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. நெல்லியைக் கொண்டு சருமப் பொலிவு எப்படிப் பெறுவது நெல்லி, மஞ்சள் ஃபேஸ் பேக் சிலருக்கு முகத்தில் பருக்களும், வடுக்களும் படிந்து பாடாய்ப் படுத்தும். அவர்கள் நெல்லிக்கனியை சாறாக்கி பூசி வரலாம். நெல்லிக்கனி தேன் மாஸ்கும் நல்ல பலன் தரும். தயிரும் நெல்லிக்கனி சாறு சேர்த்து பூசுவதால் குளிர் கால சரும வறட்சிக்கு சிறந்த தீர்வு கிட்டலாம்.