மனித குலத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதம் என்னவென்றால் அது தேநீர்தான் அலுவலகம் செல்பவர்கள் மட்டுமல்ல, வீட்டில் இருப்பவர்களுக்கும் வேலைப்பளு அதிகமாக இருந்தால் அவர்களுக்கு புத்துணர்ச்சி தரும் ஒரே மருந்து தேநீர்தான். பால் டீ, மசாலா டீ, இஞ்சி டீ, எலுமிச்சை டீ என டீயின் வகைகள் நீண்டுகொண்டே போகும். அனைத்துமே நமக்கு ஒருவித புத்துணர்ச்சியை கொடுத்தாலும் எலுமிச்சை தேநீரில் புத்துணர்ச்சி கொஞ்சம் எக்ஸ்ட்ரா கிடைக்கும். அதற்கு காரணம் எலுமிச்சையில் உள்ள அமிலச்சத்து. சரி, எலுமிச்சை தேநீர் குடிப்பதால் நம் உடலுக்குள் என்னவெல்லாம் ஏற்படுகிறது? பார்க்கலாம். எலுமிச்சையில் விட்டமின் சி, விட்டமின் பி6, பொட்டாசியம், மெக்னீசியம் மாதிரியாக சத்துகள் அதிகம். இவை அனைத்தும் ஒவ்வாமை, தொற்று இவற்றில் இருந்து காக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை நமக்கு அதிகமாக கொடுக்கின்றன. மன அழுத்தத்தை குறைக்கும் தோல் ஆரோக்கியத்துக்கு பெரும் ஆரோக்கியத்தை கொடுக்கிறது. எலுமிச்சை குடல் ஆரோக்கியத்துக்கு மிக நல்லதும் கூட.