அத்தி பழம் இயற்கையிலே மிகவும் இனிப்பான ஒரு பழம்.அனைத்து வயதினரும் சாப்பிடலாம்.



குறிப்பாக பெண்கள், மாதவிடாய் சுழற்சி நேரங்களில் இதை எடுத்து கொள்வது, இரத்த சோகை பிரச்சனை வராமல் தடுக்கும்.



அத்தி பழம் - 250 கிராம் ( ஊறவைத்தது ),கோயா - 200 கிராம்,ஏலக்காய் - தேவையான அளவு,லவங்க பட்டை - 1,சர்க்கரை - தேவையான அளவு,நெய் - 4 டீஸ்பூன்
முந்திரி, ,பாதாம், பிஸ்தா - சிறிதாக நறுக்கியது



அத்தி பழத்தை நாற்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஊறவைக்கவும்.



ஒரு பாத்திரத்தில் 4 டீஸ்பூன் அளவு நெய் சேர்த்து அதில் ஏலக்காய், பட்டை சேர்த்து லேசாக வறுத்து கொள்ளவும்.



பின்னர் அதில் ஊறவைத்த அத்தி பழத்தை மட்டும் தனியாக எடுத்து பாத்திரத்தில் சேர்த்து நன்றாக வதக்கவும்.



ஒரு 3-5 நிமிடங்கள் நன்றாக வதக்கவும்.
பின் அதில் ஊறவைத்த அத்தி பழ தண்ணீரை சேர்த்து 10 நிமிடங்கள் மெதுவாக கிளறவும்.



பின் அதனுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து, அத்தி பழத்துடன் நன்றாக கிளறவும்.



அல்வா பதம் வரும் வரை கிளறவும். அதனுடன் உலர் பழங்களை சேர்த்து கிளறி மேலே கொஞ்சம் நெய் சேர்த்து இறக்கவும்.



சுவையான, ஊட்டச்சத்து மிக்க அத்தி பழ அல்வா தயார்.