சினிமா துறையில் 15 ஆண்டுகள் - சமந்தா கடந்து வந்த பாதை!
தமிழில் பானா காத்தாடி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். தெலுங்கில் Ye Maaya Chesave
படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.
தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் பல ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். சமந்தாவின் நடிப்பிற்கு என தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் காதல் கதாநாயகியாக மட்டும் நடித்து வந்த இவர், பின்னர் ஆக்ஷன் ரோல்களிலும் நடித்தார். பிறகு, பெண்கள், கதை ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடிக்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு இன்று நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார்
இவரின் நீதானே என் பொன்வசந்தம் நித்யா கதாப்பாத்திரத்திற்கு பல ரசிகர்கள் உள்ளனர்
myositis என்ற autoimmune condition, காதல் பிரிவு, விவாகரத்து என வாழ்க்கையில் ஏற்பட்ட பல சாவல்களை எதிர்கொண்டார். இன்னல்களில் இருந்து தன்னை மீட்டு ஜொலிப்பவர்.
எவ்வளவு துன்பங்கள் நேர்ந்தாலும் அதை எதிர்த்து போராடும் மனதைரியத்தை கொண்டவராக திகழ்கிறார் என்று ரசிகர்கள் இவரை கொண்டாடுவது உண்டு.
இவரது நடிப்பில் வெளியான சிட்டாடல் வெப் தொடர் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தது. இவர் நடிப்பில் Subham மே மாதம் 9-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
ரசிகர்களை மதிப்பவர். ரசிகர்களின் பேரன்பு தன்னுடைய இன்னல் காலங்களை எதிர்கொள்ள உதவியாக இருந்ததாக தெரிவித்திருக்கிறார். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சமந்தா