கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படம் தி பேட்மேன் இதில், ராபர்ட் பேட்டின்ஸன் ஹீரோவாக நடித்திருந்தார் இப்படம், டிசி காமிக்ஸ் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது ராபர்ட் பேட்டின்ஸனிற்கு ஜோடியாக ஜோ க்ராவிட்ஸ் நடித்திருந்தார் இப்படத்தில் பேட்மேனாக நடித்திருந்த ராபர்ட்டிற்கு பாராட்டுகள் குவிந்தன காத்தம் சிட்டியில் நடைப்பெறும் க்ரைம் சம்பவங்களை தடுத்து நிறுத்தும் பேட்மேன் குறித்த கதை இது பட்டிதொட்டியெங்கும் படம் பட்டையை கிளப்பியது படம், சுமார் 770 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்தது இப்படம் வெளியாகி ஒரு வருடம் ஆகின்றது இதனை, டிசி ரசிகர்கள் வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்