ஆனந்தம் விளையாடும் வீடு - சேரனோடு கைகோர்க்கும் கௌதம் கார்த்திக்.!
ஸ்ரீ வாரி நிறுவனத்தின் தயாரிப்பில் தற்போது உருவாக உள்ள திரைப்படம் தான் "ஆனந்தம் விளையாடும் வீடு". நேற்று கிருஷ்ணகிரியில் பூஜையுடன் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியது. குடும்பக்கதைகளுக்கு எப்போதுமே தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பு உண்டு. இந்நிலையில் இந்த படமும் ஒரு முழு நீள குடும்ப திரைப்படமாக அமையவிருக்கின்றது.
நடிகர்கள் சிங்கம் புலி, சரவணன், டேனியல் பாலாஜி, பாடலாசிரியர் சினேகன் என்று 25-க்கும் மேற்பட்ட முக்கிய நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர். கௌதம் கார்த்திக் அர்ஜுன், அரவிந்த் சாமி போன்ற பல மூத்த நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் தற்போது அவர் பிரபல நடிகரும் இயக்குனருமான சேரன் அவர்களுடன் இணைந்து இந்த படத்தில் நடிக்கவுள்ளார்.
படத்தின் நாயகியாக கௌதம் கார்த்திக்குடன் ஷிவத்மிகா ராஜசேகர் இணைய நடன இயக்குனராக தினேஷ் மாஸ்டர் ஜோடி சேர்ந்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் மிகுந்த பாதுகாப்போடு படப்பிடிப்பு பணிகள் தற்போது தொடங்கி விரைந்து நடந்து வருகின்றது.
இந்த படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் கூறியபோது "தமிழ் சினிமாவில் எப்போதுமே குடும்ப கதைகளுக்கு தனி மதிப்பு உண்டு என்பதை பல படங்கள் நிரூபித்துள்ளன. ஆதலால் "ஆனந்தம் விளையாடும் வீடு" படமும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ஒரு வெற்றி திரைப்படமாக வலம்வரும்" என்று கூறியுள்ளார்.