Tanushree Dutta Emotional | சொந்த வீட்டிலேயே டார்ச்சர்.. கதறி அழுத நடிகை! வெளியான பகீர் வீடியோ
சொந்த வீட்டிலேயே தன்னை கொடுமைபடுத்துகிறர்கள் என்று தீராத விளையாட்டுப்பிள்ளை படத்தில் நடித்த நடிகை தனுஸ்ரீ தத்தா கதறி அழுது வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
நடிகர் விஷால் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான தீராத விளையாட்டுப்பிள்ளை படத்தில் மூன்று நடிகைகளில் ஒருவராக நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. பின்னர் பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இச்சூழலில் தான் கடந்த 2018 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் நானா படேகர் மற்றும் டான்ஸ் மாஸ்டர் கணேஷ் ஆச்சார்யா தன்னை Horn OK Pleassss படப்பிடிப்பின் போது பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகா புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது. ஆனால், எந்த ஒரு ஆதாரங்களும் தனுஸ்ரீ குற்றச்சாட்டில் இல்லை என்று நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
இச்சூழலில் தான் தனுஸ்ரீ தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை அழுதபடியே வெளியிட்டுள்ளார். அதில், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், பாலிவுட் மாஃபியாக்கள், அரசியல்வாதிகள் மற்றும் சமூக விரோத கும்பலால் துன்புறுத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். அதேபோல், சொந்த வீட்டிலேயே தம்மை துன்புறுத்துவதாகவும், தமக்கு யாராவது உதவி செய்யும்படியும் கூறி கதறி அழுதுள்ளார். மேலும், மன அழுத்தம் காரணமாக தனது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும்தனது வீட்டில் வேலைக்கு ஆட்களைக் கூட நியமிக்க முடியவில்லை என்றும், முன்பு வேலைக்கு வந்தவர்கள் தன் பொருட்களைத் திருடிச் சென்றதாகவும் அவர் வேதனையுடன் வீடியோ வெளியிட்டுள்ளர். இவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.