EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்

அதிமுக - பாஜக கூட்டணி ஒற்றுமையாக இல்லை என எதிர்கட்சிகள் கூறிவரும் நிலையில், பிரச்சார சுற்றுப்பயணத்தில் அமித்ஷாவை களம் இறக்க இபிஎஸ் முடிவு செய்துள்ளதாகவும், இபிஎஸ் சுற்றுப்பயணத்தின் வட தென் தமிழகத்தின் மையமான ஒரு பகுதியில் அமித்ஷா பிராச்சரம் செய்யு உள்ளதாகவும் சொல்கின்றனர்.

2026 சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகளை இப்போதே தமிழக் கட்சிகள் தொடங்கிவிட்டன. அந்த வகையில் ஆளும் திமுக ஓரணியில் தமிழ் நாடு என்ற பிரச்சாரத்தையும், அதிமுக புரட்சித்தமிழரின் எழுச்சிப் பயணம் மக்களை காப்போ தமிழகாத்தை மீட்போம் என்ற பிரச்சாரத்தையும் கையிலெடுத்திருக்கிறது. அந்தவகையில் கடந்த ஜூலை 7 ஆம் தேதி கோவை மேட்டுப்பாளையத்தில் தமிழகம் தழுவிய சுற்றுப்பயணத்தை தொடங்கினார். இந்த பயணத்தின் தொடக்க விழாவின் போது தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை அவர் வரவேற்ற விதம் பாஜகவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

அப்போது நம்முடைய கூட்டணி ஒற்றுமையாக இல்லை என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன..அதற்கு இடம் கொடுக்க கூடாது என்று ஆலோசனை செய்தாக சொல்லப்படுகிறது.  அதாவது சுற்றுப்பயணத்தின் போது வட   தமிழகம் மற்றும்  தென் தமிழகத்தின் மையப்பகுதியில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் வகையில் இரு பிரமாண்ட கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று இபிஎஸ்  தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. ரெண்டு கட்சியும் ஒன்னா இருந்தா  தான்  நமக்கு பலம், அதேமாதிரி எதிர்கட்சிகளும் கொஞ்சம் அமைதியா இருப்பாங்க,.. நம்ம தொண்டர்களுக்கும் அது உற்சாகத்த கொடுக்கும் என்று இரண்டு பேரும் ஆலோசனை செய்ததாக சொல்லப்படுகிறது. அதே போல், சுற்றுப்பயணம் முழுவதும் பாஜகவினரும் கலந்து கொள்வார்கள் என்ற உறுதியை இபிஎஸ்-க்கு நயினார் நாகேந்திரன் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola