கார்த்திக் சுப்புராஜின் சீயான் 60 - 17 ஆண்டுகள் கழித்து இணையும் கூட்டணி.!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் அடுத்த படம் தான் இன்னும் தலைப்பிடப்படாத "விக்ரம் 60". சீயான் விக்ரம் அவர்களின் 60-வது படமாக உருவாகி வரும் இந்த படத்தில் நடிகர் துருவ் அவரது தந்தையுடன் இணைத்து நடிக்கின்றார். சந்தோஷ் நாராயணன் இசையில், இந்த படத்தை 7 Screen Studio நிறுவனத்தின் சார்பில் லலித் குமார் தயாரித்து வருகிறார். 

இந்தியாவில் கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் தடைப்பட்டிருந்த நிலையில், அண்மையில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. பிரபல நடிகை வாணி போஜன் இந்த படத்தில் இணைத்துள்ளார் என்றும் அவருடைய பகுதிகளுக்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் இன்னொரு பிரபலம் இணைத்திருப்பதை படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. ஏறத்தாழ 17 ஆண்டுகள் கழித்து விக்ரமுடன் இணைந்து நடிக்கவுள்ளார் பிரபல நடிகை சிம்ரன். 2003ம் ஆண்டு வெளியான "பிதாமகன்" படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவுள்ள திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.  

ஆனால் சிம்ரன் மற்றும் விக்ரம் ஏற்கனவே இணைந்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் "துருவநட்சத்திரம்" என்ற படத்தில் நடித்துள்ளபோதும் இன்னும் அந்த திரைப்படம் வெளிவராதது குறிப்பிடத்தக்கது.

JOIN US ON

Whatsapp
Telegram