Bihar Exit Poll 2025 | ’’அரியணை பாஜகவுக்கு தான்! ஆனால் CM யாரு தெரியுமா?’’ EXIT POLL MEGA TWIST
பீகாரில் ஆட்சிக் கட்டிலில் அமரப்போவது யார் என்பது குறித்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை ஆக்ஸிஸ் மை இந்தியா வெளியாகியுள்ளது. பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகளைப்போலவே இதிலும் NDA கூட்டணியின் கை ஓங்கியுள்ளது. ஆனால் மக்கள் விரும்பும் முதல்வர் யார் என்பதில் தான் இதில் ட்விஸ்ட் அமைந்துள்ளது..
பீகார் சட்டசபைக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதில், கடந்த 6-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், முதல் கட்டத்தைவிட இரண்டாம் கட்டத்தில் இன்னும் அதிக சதவீத வாக்குகள், அதாவது மாலை 5 மணி நிலவரப்படி 67.14 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதனால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
பிரபல ஆக்ஸிஸ் மை இந்தியா நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பின்படி, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தான் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்ற தகவல்கள் கிடைத்துள்ளன.
அவர்களது கருத்துக் கணப்பன்படி,
பாஜக கூட்டணி - 121 முதல் 141 இடங்களை பிடிக்கும்.
ஆர்ஜேடி கூட்டணி - 97 முதல் 118 இடங்களை பிடிக்கும்.
ஜன் சுராஜ் - 0 முதல் 2 இடத்தை பிடிக்கும்.
மற்றவை - 1 முதல் 7 இடங்களை பிடிக்கும்.
பிற பிரபல ஊடகங்களான டைம்ஸ் ஆஃப் இந்தியா, பீப்பிள்ஸ் பல்ஸ்,ஜேவிசி போல்,Matrize,Peoples Insight ஆகியவை நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளும் கிட்டத்தட்ட இதற்கு நிகரான முடிவுகளையே வெளியிட்டன, ஆக பீகார் களம் எண்டிஏவுக்கு சாதகமாக தான் உள்ளது என நிரூபனமாகியுள்ளது.
இந்நிலையில் தான் என்னதான் ஆட்சியை பிடிக்கப்போவது எண்டி ஏ கூட்டணி என்றாலும் அடுத்த முதல்வர் யார் என்பதில் மக்கள் சுவாரஸ்ய முடிவை கூறியுள்ளதாக ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளது..மேலும் சாதிவாரியாக இந்த வாக்குகளை பிரித்தால் எண்டிஏ கூட்டணிக்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் மேலடுக்கினரின் ஆதரவு எண்டிஏவுக்கு உள்ள நிலையில், இஸ்லாமியர்களின் ஒட்டுமொத்த ஆதரவும் மகாத்பந்தன் கூட்டணிக்கு செல்கிறது எனவும் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.
எண்டிஏ கூட்டணியின் தற்போதைய பீகார் முதல்வர் நிதிஷ்குமார் 22 சதவீத மக்கள் விருப்ப வாக்குகளை பெற்றுள்ள நிலையில், ஆர்ஜேடியை சேர்ந்த தேஜஸ்வி யாதவ் 34 சதவீத வாக்குகள் பெற்று மக்கள் விரும்பும் முதல்வர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.