Madhampatti Rangaraj vs Joy Crizilda | ’’ HELLO HUSBAND!தைரியம் இருந்தா வாங்க’’மாதம்பட்டி vs ஜாய்
டிஎன் ஏ டெஸ்ட்க்கு ரெடி என மாதம்பட்டி ரங்கராஜ் சில நாட்களுக்கு முன் ஸ்டேட்மெண்ட் விட்ட நிலையில், ஹலோ ஹஸ்பண்ட் தைரியம் இருந்தால் DNA test கு வாங்க Husband சும்மா statement குடுத்தா மட்டும் விடாதீங்க என ஜாய் க்ரிஷில்டா தெரிவித்துள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜ் மகளிர் ஆணைய விசாரனையில் ஜாய் கிரிஷில்டாவை இரண்டாம் திருமணம் செய்தது உண்மை தான் எனவும் குழந்தைக்கு அப்பா நான் தான் எனவும் அவர் ஒப்புக்கொண்டதாக மகளிர் ஆணைய பரிந்துரையில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது அந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்..இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நான் ஜாய்யை தன்னிச்சையாக (under free will) திருமணம் செய்து கொண்டதாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என்பதை நான் திட்டவட்டமாக கூறுகிறேன். ஜாய் என்னை அவதூறு செய்வதற்காக தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதாக பலமுறை மிரட்டியதால், இந்த திருமணம் மிரட்டலின் பேரில் நடந்தது.நான் ஒருபோதும் டிஎன்ஏ பரிசோதனையை மறுத்ததில்லை, மேலும் அந்தக் குழந்தை என்னுடையது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால்(DNA Test), அந்தக் குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வேன் என்றும் கூறியுள்ளேன் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது வரை டிஎனே டெஸ்ட் எடுக்கப்படாத நிலையில், ஜாய் க்ரிஷில்டா ரங்கரஜுடன் எடுத்த போட்டோவை போஸ்ட் போட்டு சீண்டியுள்ளார். அந்த பதிவில்,
Hello Husband #madhampattyrangaraj DNA பரிசோதனைக்கு நீங்கள் statement கொடுத்துள்ளீர்கள், ஆனால் அவர் எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார்? என்ன பயம்? அடிக்கடி பணம் கொடுத்து ஊடகங்களில் எனக்கெதிராக யூடியூப், செய்திகளில் தகவல்கள் வெளியிடச் செய்கிறீர்கள். நான் அமைதியாக இருந்தாலும், உங்க உள்குத்து என்னன்னு எனக்கு தெரியாம போய்டுமா என்ன ? 😂தைரியம் இருந்தால் DNA test கு வாங்க Husband #madhampattyrangaraj சும்மா statement குடுத்தா மட்டும் போதாது என ஜாய் தெரிவித்துள்ளார்.