Cuddalore Accident | பேருந்து மீது மோதிய வேன்தூக்கி வீசப்பட்ட பெண் பகீர் சிசிடிவி காட்சிக்ள்

Continues below advertisement

கடலூர் அருகே தனியார் பேருந்தும், வேனும் நேருக்கு நேர்  மோதிய விபத்தில் பேருந்தில் இருந்து பெண் பயணி ஒருவர் முன் கண்ணாடியை உடைத்துக்கொண்டு சாலையில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்த பூவாணி குப்பம் பகுதியில் இருந்து காடாம்புலியூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்கு பெண்களை ஏற்றிக்கொண்டு 
வேன் ஒன்று சென்றது. 

இந்நிலையில் குள்ளஞ்சாவடி பேருந்து நிறுத்தத்திலிருந்து  இருந்து பரங்கிப்பேட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த வேன்  தனியார் பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் மோதிய வேகத்தில் முன் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே வந்து விழுந்தார். சாலையில் விழுந்த அப்பெண் காயங்களுடன் எழுந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது.

இதில் வேனில் பயணம் செய்த 15 பெண்களும், பேருந்தில் பயணம் செய்த 5 பயணிகளும் பலத்த காயமடைந்துள்ளனர். இதனையடுத்து படுகாயம் அடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola