எல்லாமே வேகமயமாகி விட்ட உலகில், அதே வேகத்தில் ஒரு புதிரை விடுவிக்கப் பலர் விரும்புகிறார்கள். அதையே நின்று நிதானமாகச் செய்யவும் சிலர் யோசிப்பதுண்டு.


எது எப்படியோ, வழக்கமான பிரேக்கிங் செய்திகள், மழை, அரசியல், தேர்தல், சினிமா செய்திகளை வாசிப்பதற்கு இடையில், நம்மை சற்றே ரிலாக்ஸ் செய்து கொள்ள வேண்டியது முக்கியம்.


அதற்கு இத்தகைய ‘’மூளைக்கு வேலை’’ வகைமை புதிர்கள் நிச்சயம் உதவும்.


இதோ இந்த ஓவியத்தைப் பாருங்கள். கணக்கில் அடங்காத வான் கோழிகள் நெருக்கமாக நின்று கொண்டிருக்கின்றன. அவற்றின் வால் பகுதிகள், தலையை ஒட்டி இருக்கின்றன.  இவை அனைத்துக்கும் நடுவில், 3 சேவல்கள் ஒளிந்திருக்கின்றன. அவை எங்கே இருக்கின்றன?


இதையும் கண்டுபிடிக்கலாம்:  Optical Illusion: தாமரை குளத்தில் மறைந்திருக்கும் தவளை; கண்டுபிடிக்க 11 விநாடிகளே நேரம்! 


கண்டுபிடிக்கலாம், வாருங்கள்..!


என்ன, உங்களால் கண்டுபிடிக்க முடிந்ததா? முடியாதவர்களுக்கு விடை இதோ..!




சேவல்களை அவற்றின் சிவப்பு நிறக் கொண்டையை வைத்து எளிதில் அடையாளம் காணலாம். ஆனால் வான் கோழிகளின் சிவப்பு நிற வால் பகுதியே, கொண்டை போலக் காட்சியளிக்கிறது. இதனால் சேவலைக் கண்டுபிடிப்பது சற்றே சவாலாக இருந்திருக்கும். எனினும் கொண்டை, வால் பகுதியைவிட சற்றே சிறிதாக இருக்கும் என்பதால், கூர்ந்து கவனித்தால் கண்டுபிடித்து விட முடியும்.


இதன்படி, இடது ஓரத்தில் ஒரு சேவலும் வலது ஓரத்தில் 2 சேவல்களும் ஒளிந்திருக்கின்றன.


- மூளைக்கு வேலை கொடுக்கும் இந்த புதிர் சிறிது நேரம் உங்களை சுவாரசியமாக்கி, மூளைக்குப் புத்துணர்ச்சி அளித்திருக்கும் என்று நம்புகிறோம்..!


- அடுத்தடுத்த அத்தியாயங்களில் புதிர் முடிச்சுகளை தொடர்ந்து அவிழ்க்கலாம்!


இதையும் கண்டுபிடிக்கலாம்: Puzzle: மூளையை சுறுசுறுப்பாக்கும் பட புதிர்: 7 விநாடிகளில் 4 வார்த்தைகள்தான்! கண்டுபிடிங்க பார்க்கலாம்!