இப்போதெல்லாம் இணையத்தில் ஏராளமாய் ரீல்ஸ் கொட்டிக் கிடக்கின்றன. திரும்பிய பக்கமெல்லாம் புதுமையைக் கொட்டி, புதுப்புது காணொளிகளை இறக்கிக் கொண்டே இருக்கிறார்கள். இளம் தலைமுறையின் பெரும்பாலான நேரம் இதிலேயே கழிகிறது. ஆனால் இவை கண்களுக்கு விருந்தாகிறதே தவிர, சிறிதும் மூளைக்கு வேலை கொடுப்பதில்லை.


இந்த நிலையில், ஒன்றுபோல இருக்கும் இரு படங்களுக்கு இடையிலான புகைப்படங்களை நீங்கள் கடந்து வந்திருக்கலாம். அவற்றுக்கு இடையிலான வித்தியாசங்களை, சற்றே மெனக்கிட்டால் கண்டுபிடித்து விடலாம். நமக்கு நாமே மனதுக்குள் சபாஷ் சொல்லிக் கொள்ளலாம்.


இதோ, இப்போது அத்தகைய ஒரு படத்தைப் பார்க்கலாமா?


ஒரு பொம்மை, வானூர்தியில் ஏறி அமர்ந்து சிரித்துக்கொண்டே பயணிக்கிறது. வானில் பயணிக்கும் புகைப்படத்தில், ஆங்காங்கே நட்சத்திரங்கள் மிளிர்கின்றன. மேகக் கூட்டங்கள் தெரிகின்றன.  சற்றேறக்குறைய அதே வகைமையில் இன்னொரு படமும் இருக்கிறது.


இரண்டுக்கும் என்ன வித்தியாசங்கள்? 7 நொடிகளுக்குள் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.




புகைப்படத்தை கவனியுங்கள். பொம்மையின் தலைப் பட்டையில் முழுமையாக நீல நிறம் இல்லை. அதன் கழுத்தில் சுற்றப்பட்டிருக்கும் ஸ்கார்ஃபின் இடது ஓரத்தில் ஒன்றில் நட்சத்திரங்கள் பொறிக்கப்படவில்லை. இடது கையில் விரல்கள் இல்லை. வானூர்தியின் விசிறியில் வேகக் குறியீடு குறிப்பிடப்படவில்லை. புகைப்படத்தின் வலது கீழ் ஓரத்தில் நட்சத்திரம் இல்லை.


இந்த படம் சிறிது நேரம் உங்களை சுவாரசியமாக்கி, மூளைக்குப் புத்துணர்ச்சி அளித்திருக்கும் என்று நம்புகிறோம்..!


புதிர் முடிச்சுகளை தொடர்ந்து அவிழ்க்கலாம்!


இதையும் வாசிக்கலாம்Puzzle: மூளையை சுறுசுறுப்பாக்கும் பட புதிர்: 7 விநாடிகளில் 4 வார்த்தைகள்தான்! கண்டுபிடிங்க பார்க்கலாம்!