ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் காட்சி மயக்கப் படங்கள்தான் இன்றைய இணைய உலகின் ஹாட் டாபிக். ஒரு புகைப்படத்தில் ஒளிந்திருக்கும், பொருட்கள், வார்த்தைகள், இரு படங்களுக்கு இடையில் 6 வித்தியாசங்கள் என பல வகைமைகள் இதில் உண்டு. ஓடிக் கொண்டே இருக்கும் வேக உலகில், இந்த மாய புகைப்படங்கள் நம் மூளையை சுறுசுறுப்பாக்கிவிடும்.  


 ஃபேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸப் சாட் என செல்போன் திரையை ஸ்க்ரோல் செய்யும் வேகத்தை மட்டுப்படுத்தி, சற்றே இந்த புகைப்படங்களில் இல்லையில்லை… புதிர் படங்களில் சிறிது நேரம் செலவிடலாமே?


 இந்த புகைப்படத்தை ஏற்கெனவே நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் மீண்டும் புதிருக்கான விடையைக் கண்டுபிடிக்கச் சலிக்காது.


த்ரில்லாகவும் சவாலாகவும் இருக்கும்


புதிதாகப் பார்ப்போருக்குச் சொல்லவே வேண்டாம்.. நிதானமாகப் பார்த்து ஒவ்வொன்றாகக் கண்டுபிடிப்பது பெரிதில்லை. ஆனால் 7 விநாடிகளில், மறைந்திருக்கும் 4 வார்த்தைகளை விரைவாகக் கண்டுபிடிப்பது சற்றே த்ரில்லாகவும் சவாலாகவும் இருக்கும். முயற்சிக்கலாமா?


இந்த புகைப்படத்தைப் பாருங்கள். வீட்டின் வரவேற்பு அறையில் ஓர் ஆணும் பெண்ணும் இருக்கின்றனர். ஆண் அமர்ந்திருக்க, பெண் நின்று பார்த்துக் கொண்டிருக்கிறார். வீட்டில் ஏராளமான உள் அலங்காரங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த படத்தில் 4 ஆங்கில வார்த்தைகள் ஆங்காங்கே ஒளிந்திருக்கின்றன. அதை 7 விநாடிகளுக்குள் கண்டுபிடியுங்கள், பார்க்கலாம்…


கழுகுப் பார்வையைக் கொண்டு யாராவதால் கண்டுபிடிக்க முடிந்தததா?


முடியாதவர்களுக்கு விடை இதோ..!


Lamp, Window, Rug மற்றும் Brain ஆகிய 4 வார்த்தைகள் படத்தில் ஒளிந்துள்ளன, எங்கே..? இதோ பார்க்கலாம்.


* Lamp என்னும் வார்த்தை புதிர் படத்தின் விளக்கின் மேலேயே எழுதப்பட்டுள்ளது.


* Window என்னும் வார்த்தை, திறந்து வைக்கப்பட்டுள்ள இரண்டு திரைச்சீலைகளின் மேலே எழுதப்பட்டுள்ளது.


* அதேபோல Rug என்ற வார்த்தை தரை விரிப்பின் வடிவமைப்பில் மறைந்துள்ளது.


* மூளை எனப் பொருள்படும் Brain என்னும் வார்த்தை, படத்தில் உள்ள ஆணின் தலையிலேயே எழுதப்பட்டுள்ளது.




எளிய புதிர்கள்


இத்தகைய எளிமையானது புதிர்களுக்கு, சிறப்புத் திறமை தேவையில்லை. இவை உங்கள் கவனம் மற்றும் சொல்லகராதி திறன்களை சோதிக்கும் விதமாகவே இருக்கும்.


வார்த்தை விளையாட்டு புதிர்களை தீர்க்க, குறைவான நேரமே தேவைப்படும். இதனால், சில வினாடிகளில் நீங்கள் பதிலைக் கண்டுபிடித்து வெற்றியாளராக உணர முடியும் என்பதே இதன் சிறப்பம்சம்.


- புதிர் முடிச்சுகளை தொடர்ந்து அவிழ்க்கலாம்!