ஆப்டிக்கல் இல்யூஷன் (Optical Illusion) எனப்படும் ஒளியியல் மாயை புகைப்படங்கள்தான் இன்றைய நாளின் ட்ரெண்ட். இத்தகைய புதிர் ஒன்றை இப்போது காணலாம்.


ஒரேபோல இருக்கும் ஓவியங்கள் அல்லது புகைப்படங்களில் வேறு மாதிரியாக இருக்கும் ஒன்றையோ, மறைந்திருக்கும் ஒன்றையோ மிக வேகமாக கண்டுபிடிப்பதுதான் இன்றைய சவால். இதன்மூலம் நம் மூளையின் சிந்தனைத் திறனை கூர்தீட்ட முடியும். சோம்பி இருக்கும் பொழுதையோ மனதையோ சுவாரசியமானதாக மாற்ற முடியும். 


அந்த வகையில் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் என எல்லா தரப்பினருமே இந்த புதிரை விடுவிக்க முயற்சிக்கலாம். என்ன, தயாரா?


இந்த புகைப்படத்தைப் பாருங்கள். 


அங்கு அழகியதோர் குளம், வண்ணங்களைச் சொரிந்து நிற்கிறது. குளத்தில் தாமரை மலர்கள் பூத்து நிற்கின்றன. பல தாமரை மொட்டுகள் விரியக் காத்திருக்கின்றன. தாமரை மலர்களைப் பிரிய மனமில்லாமல், அவற்றை ஒட்டியவாறே சில இலைகள், விரிந்தும் நிமிர்ந்தும் நிற்கின்றன. ஆங்காங்கே சில செடிகளும் கிளைத்து, பூக்களோடு நிற்கின்றன.


இடையில் ஒரு தவளை மறைந்திருக்கிறது. அதை 11 விநாடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்களுக்கான சவால்.


நன்கு கவனித்துப் பாருங்கள். ஒன்றுபோலவே இருக்கும் ஒளியியல் மாயப் புகைப்படங்களில் ஒளிந்திருக்கும் தவளையைக் கண்டுபிடிக்க முடிந்ததா? 




வலது மேல் மூலையில், ஒரு தவளை ஒளிந்திருப்பதைப் பார்த்தீர்களா?


இந்த புதிர் சிறிது நேரம் உங்களை சுவாரசியமாக்கி, மூளைக்குப் புத்துணர்ச்சி அளித்திருக்கும் என்று நம்புகிறோம்..!


- புதிர் முடிச்சுகளை தொடர்ந்து அவிழ்க்கலாம்!


இதையும் வாசிக்கலாம்: Puzzle: மூளையை சுறுசுறுப்பாக்கும் பட புதிர்: 7 விநாடிகளில் 4 வார்த்தைகள்தான்! கண்டுபிடிங்க பார்க்கலாம்!