இந்தியாவின் முன்னணி உணவு விநியோக நிறுவனமாக ஸ்விக்கியும்,ஜோமோட்டோவும் செயல்பட்டு வருகிறது.இந்த நிலையில், சற்றுமுன் திடீரென ஜோமோட்டோ மற்றும் ஸ்விக்கி செயலிகள் செயல்படவில்லை. இதவனால், ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்பவர்கள், ஸ்விக்கி மற்றும் ஜோமோட்டோவில் பணிபுரிபவர்கள், உணவகத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் முன்னணி உணவு விநியோக நிறுவனமாக ஸ்விக்கியும்,ஜோமோட்டோவும் செயல்பட்டு வருகிறது.இந்த நிலையில், சற்றுமுன் திடீரென ஜோமோட்டோ மற்றும் ஸ்விக்கி செயலிகள் செயல்படவில்லை. இதவனால், ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்பவர்கள், ஸ்விக்கி மற்றும் ஜோமோட்டோவில் பணிபுரிபவர்கள், உணவகத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா முழுவதும் உள்ள பெருநகரங்கள், இரண்டாம் கட்ட நகரங்கள் ஆகியவற்றில் ஸ்விக்கி, ஜோமோட்டோவை பயன்படுத்துவோர் அதிகளவில் உள்ளனர். குறிப்பாக, கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் அதிகளவில் ஸ்விக்கி மற்றும் ஜோமோட்டோ சேவை பயன்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், சர்வர் கோளாறு காரணமாக ஸ்விக்கி மற்றும் ஜோமோட்டோ நிறுவனங்களின் செயலிகள் செயல்படவில்லை. இந்த குறைபாடுகளை நீக்கும் பணியில் அந்தந்த நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்விக்கி மற்றும் ஜோமோட்டோ பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகளவில் இருக்கும். இந்த நிலையில், இந்த முன்னணி உணவு டெலிவரி நிறுவனங்களின செயலிகள் செயல்படாதது அந்த நிறுவனங்களுக்கு பெருத்த இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
திடீரென முடங்கிய இந்த செயலிகளால் ஸ்விக்கி மற்றும் ஜோமோட்டோவில் உணவு டெலிவரி செய்யும் பணியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு தாங்கள் செய்யும் ஆர்டர்களின் அளவிற்கு ஏற்ப சம்பளம் கிடைத்து வந்தது. இந்த திடீர் சிக்கலால் அவர்களால் எந்த ஆர்டரும் எடுக்க முடியாமல் பரிதாபமான நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
ஸ்விக்கி மற்றும் ஜோமோட்டோ பணியை நம்பி ஆயிரக்கணக்கானோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள், பகுதி நேர வேலை செய்பவர்கள் உள்ளிட்ட பலரும் ஸ்விக்கி, ஜோமோட்டோவில் வாகனம் ஓட்டி உணவு விநியோகித்து வருகின்றனர். இந்த செயலிகள் திடீரென செயல்படாததால் அவர்களின் இன்றைய வேலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : காங்கிரஸ் விரும்பினால் 2024 தேர்தலில் இணைந்து போட்டியிடலாம்: மம்தா பானர்ஜி
மேலும் படிக்க : Miss Bikini Archana Gautam : கீழே விழுந்தாதான் குழந்தை நடக்க கத்துக்கும்.. தேர்தலில் தோல்வி அடைந்த மிஸ் பிகினி இந்தியா அர்ச்சனா கவுதம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்