18 வயதுக்குட்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில், இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேரை பெங்களூரு காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 


தினக்கூலி வேலை செய்து வரும் சிறுமியின் பெற்றோர், பிழைப்பிற்காக பெங்களூருவுக்கு குடிப்பெயர்ந்துள்ளனர். அவர்கள் வசித்து வந்த பகுதியில் குடியிருந்த ராஜேஸ்வரி என்பவர், டெய்லர் கடை நடத்தி வந்துள்ளார். பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பும் சிறுமி அவரது கடைக்குச் சென்று டெய்லரிங் பயின்று வந்திருக்கிறார். 


இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த சிறுமியை அழைத்துச் சென்ற ராஜேஸ்வரி, அவருக்கு ஜூஸில் மயக்க மருத்து கொடுத்து படுக்க வைத்துள்ளார். அதனை அடுத்து, கேசவமூர்த்தி என்பவரை வீட்டிற்கு வரவழைத்திருக்கிறார் ராஜேஸ்வரி. மயக்கத்தில் இருந்த சிறுமிக்கு ராஜேஸ்வரியும், கேசவமூர்த்தியும் பாலியல் தொல்லை தந்து சித்திரவதை செய்துள்ளனர். மயக்கத்தில் இருந்து விழித்த சிறுமியை ஏமாற்றி மீண்டும் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.



இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் அந்த சிறுமியை ராஜேஸ்வரி வீட்டிற்கு அழைத்திருக்கிறார். வர மறுத்த சிறுமியை மிரட்டி அழைத்து சென்றுள்ளார் ராஜேஸ்வரி. மீண்டும் அதே சம்பவம் தொடர்ந்த நிலையில், வீடு திரும்பிய சிறுமியின் ஆடையில் இரத்தக்கரை இருப்பதை அவர் அம்மா கவனித்திருக்கிறார். இது குறித்து விசாரிக்கையில், ராஜேஸ்வரிமீது அவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதனை அடுத்து, சிறுமியின் தாயார் எச்.எஸ்,ஆர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டதில் ராஜேஸ்வரி, கூட்டாளிகளான கலாவதி, கேசவமூர்த்தி, சத்யராஜூ, சரத், ரஃப்பீக் ஆகியோரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், கடத்தப்பட்ட சிறுமிக்கு தொடர்ந்து 6 நாட்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து, குற்றம்சுமத்தப்பட்ட 6 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




பிற முக்கியச் செய்திகள்:






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண