சீனாவில் சாங்சுன் நகரில் புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 90 லட்சம் மக்கள் வசிக்கும் பகுதியில் புதிய வகைத்தொற்று பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அப்பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் முதன்முதலாக கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து மளமளவென மற்ற நாடுகளுக்கும் பரவியது. வெளிநாட்டுப் போக்குவரத்து காரணமாக உலக நாடுகளில் தொற்று ஏற்பட்டது. கொரோனா தொற்றால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கில் மடிந்தனர்.
தொற்று ஒரே முறையுடன் முடிந்துபோகாமல் பெருந்தொற்றாக முதல் அலை, இரண்டாம் அலை, 3ஆவது அலை, 4ஆவது அலை தொடர்ந்து தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்த சூழலில் சீனாவில் தொற்று பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டது. அதையும்மீறி அங்கங்கே தொற்றுகள் ஏற்பட்ட்டாலும், அவை அரசால் கட்டுப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், சீனாவின் தொழில் நகரமான சாங்சுன் நகரில் புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 90 லட்சம் மக்கள் வசிக்கும் அந்தப் பகுதியில் புதிய வகைத் தொற்று பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அப்பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அங்கே இன்று (வெள்ளிக்கிழமை) 397 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 98 பேர் சாங்சுன் நகர் இருக்கும் ஜிலின் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.
முன்னதாக நேற்று (வியாழக்கிழமை) தொற்று பாதிப்பு வழக்கத்தைவிடலேசாக அதிகரித்தது. 60 பேர் லேசான அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவருடைய ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணுப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜிலின் மாகாண சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவலில், ''சாங்சுன் நகரில் வாழும் மக்கள் வீட்டில் இருந்தே பணிபுரியக் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது பரவும் தொற்று, ஒமிக்ரான் வைரஸின் பிஏ2 வகையாக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு தொடக்கத்தில்தான் சீனாவில் கொரோனா வைரஸால் 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். கடந்த 3 வாரங்களுக்கு முன் 397 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸால் 1369 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ் புதிய வகை வைரஸா, ஏற்கெனவே இருப்பதன் திரிபா, அதன் பரவும் வேகம் எப்படி இருக்கும், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது எப்போது என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்