உலகம் முழுவதும் அதிகமாக பயன்படுத்தப்படும் குறுஞ்செய்தி செயலிகளில் ஒன்று வாட்ஸ் அப். இந்தச் செயலி மூலம் குறுஞ்செய்தி மட்டுமல்லாமல் பயனாளர்கள் ஆடியோ மற்றும் வீடியோ கால்களையும் செய்து கொள்ளலாம். இந்த நிறுவனம் அவ்வப்போது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிதாக அப்டேட்களை விடுத்து வருகிறது.
இந்நிலையில் வாட்ஸ் அப் ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதியில் புதிய அப்டேட் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் இனிமேல் வாட்ஸ் அப் ஆடியோ மற்றும் வீடியோ கால்களுக்கு லிங்க் அனுப்பி கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது கூகுள் மீட் மற்றும் ஸூம் ஆகிய செயலிகளை போல் லிங்க் அனுப்பி பிறருடன் பேசும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வாட்ஸ் அப் செயலியின் தலைவர் வில் கேத்கார்ட் தன்னுடைய ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “இந்த வாரம் முதல் வாட்ஸ் அப் கால்களுக்கு லிங்க் வசதி அறிமுகமாக உள்ளது” எனப் பதிவிட்டுள்ளார். அவரின் இந்தப் பதிவு பலரையும் கவர்ந்துள்ளது. வாடிக்கையாளர் பலர் லிங்க் வசதி இருப்பதால் கூகுள் மீட் மற்றும் ஸூமிற்கு செல்வதால் இந்த முடிவை வாட்ஸ் அப் எடுத்துள்ளதாக தெரிகிறது.
மேலும் படிக்க: மத நல்லிணக்கத்தை சீர்குலைத்ததா? 10 யூ ட்யூப் சேனல்களில், 45 வீடியோக்களை முடக்கிய மத்திய அரசு..
இதை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் தங்களுடைய வாட்ஸ் அப் செயலியில் கால் வசதியில் சென்று Call Historyயில் -Create Call link என்பதை க்ளிக் செய்ய வேண்டும். அப்போது வரும் லிங்கை தாங்கள் பேச விரும்பும் நபர்களுக்கு அனுப்ப வேண்டும். அந்த லிங்கை பயன்படுத்தி அவர் கால் பேச முடியும். இந்த முறை இந்த வாரம் ஒரு சிலருக்கு அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு அடுத்த அப்டேட்டில் வரும் என்று கருதப்படுகிறது.
அத்துடன் வாட்ஸ் அப் செயலியில் 32 பேர் கொண்ட வீடியோ கால் வசதி விரைவில் வரும் என்றும் தகவல் வெளியாகி வருகிறது. இந்த முறை தொடர்பான இறுதிகட்ட சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அது வெற்றி அடையும் பட்சத்தில் 32 பேர் உடன் வீடியோ கால் பேசும் வசுதியும் வாட்ஸ் அப் செயலியில் விரைவில் அறிமுகமாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஆகிய இரண்டு பயனாளர்களுக்கும் விரைவில் வரும் என்று கருதப்படுகிறது. இது தொடர்பான விவரத்தை வாட்ஸ் அப் நிறுவனம் தெளிவாக தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: இனி இன்னும் கூடுதல் பாதுகாப்பு.. UIDAI அறிவித்த அதிரடி திட்டம்.