தவறான தகவல்களை பரப்பியதாகவும் , மத நல்லிணக்கத்தை சீர்க்குலைப்பதாகவும் கூறி 45 யூடியூப் வீடியோக்களை இந்திய அரசு தடை செய்துள்ளது.
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஆன்லைன் வீடியோ பகிர்வு மற்றும் சமூக ஊடக தளமான 10 யூடியூப் தளங்களில் இருந்து மொத்தம் 45 வீடியோக்களை தடை செய்ய உத்தரவிட்டுள்ளது. பிளாக் செய்யப்பட்ட வீடியோக்கள் அதிகபட்சமாக 1 கோடியே 30 லட்சம் பார்வையாளர்கள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கை புலனாய்வு அமைப்புகளின் தகவலின் அடிப்படையில் செப்டம்பர் 23 அன்று இந்த முடிவு எடுக்கப்பட்டது.பிளாக் செய்யப்பட்டவர்களில் பிரபல யூடியூபர் துருவ் ரதியும் ஒருவர்.தவறான தகவல்களை பரப்பியதாகவும் , மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாகவும் அந்த வீடியோ இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
இந்த வீடியோக்களின் உள்ளடக்கத்தில் மத சமூகங்களிடையே வெறுப்புணர்வை பரப்பும் நோக்கத்துடன் பரப்பப்பட்ட போலி செய்திகள் , மத சமூகங்களுக்கு எதிரான வன்முறை அச்சுறுத்தல்கள், இந்தியாவில் உள்நாட்டுப் போர் பிரகடனம், மற்றும் மார்பிங் செய்யப்பட்ட வீடியோக்கள் ஆகியவை அடங்கும்.. இத்தகைய காணொளிகள் நாட்டில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் திறன் கொண்டவை என அரசு தெரிவிக்கிறது. பிளாக் செய்யப்பட்ட வீடியோக்களில் சில அக்னிபாத் திட்டம், இந்திய ஆயுதப் படைகள், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு எந்திரம், காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சனைகளில் தவறான தகவல்களை பரப்பியதாக கூறப்படுகிறது.