கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.   மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்துக்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  


 






பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி நடைபெற்றது. 5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.  இதனை முன்னிட்டு படக்குழுவினர் தீவிர ப்ரோமோஷனில் களமிறங்கியுள்ளனர். முன்னதாக கடந்த சனிக்கிழமை  படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நிலையில் இதுவரை  கிட்டதட்ட ரூ.5 கோடிக்கான வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


மேலும் எங்கு பார்த்தாலும் பொன்னியின் செல்வன் குறித்த பேச்சுக்கள் தான் காணப்படுகிறது. இதனிடையே படக்குழுவினர் கேரளா, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, டெல்லி ஆகிய இடங்களுக்கு சென்று படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டனர்.


 






இதனிடையே, படத்துக்கான முன்பதிவு சில திரையரங்குகளில் தொடங்கிவிட்டது.இந்நிலையில் படத்துக்கு முதல் நாள் முதலே அரசு நிர்ணயித்த விலையில்தான் டிக்கெட்களை விற்கவேண்டும் என இயக்குனர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.அதுமட்டுமல்லாமல், மும்பையில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்களிடம் மணிரத்னம் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்,பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டிக்கெட் விலையை 100 ரூபாயாக விற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார், ஏனென்றால் அப்போதுதான் மக்கள் குடும்பத்தோடு வந்த படத்தை பார்ப்பார்கள், என்று தெரிவித்துள்ளார் பொன்னியின் செல்வனின் இயக்குனர் மணிரத்தினம்.