ஆதார் மூலம் கைரேகையைப் பயன்படுத்தி பணத்தை எடுத்தால், பாதுகாப்பைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மற்றொரு அம்சத்தை சேர்த்துள்ளது. இதன் மூலம், கைரேகை பயன்படுத்தப்பட்ட நபர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதை   point of sale (PoS) என்னும் வசதி அடையாளம் காணும் என லைவ் ஹிந்துஸ்தான் இணையதளம் தெரிவித்துள்ளது.


நாட்டில் 1,507 கோடிக்கும் அதிகமான வங்கி பரிவர்த்தனைகள் ஆதார்-இயக்கப்பட்ட கட்டண முறையை (ஏஇபிஎஸ்) பயன்படுத்தி நடந்துள்ளன. இதில் 7.54 லட்சம் பரிவர்த்தனைகள் போலியானது என தெரியவந்துள்ளது.  இந்த புதிய அம்சம் ஆதார்-இயக்கப்பட்ட கட்டண முறையை தவறாகப் பயன்படுத்துவதை விரைவாகக் கண்காணிக்கும் என கூறப்படுகிறது.




தற்போது வெளியான அறிக்கையின்படி, மோசடி செய்பவர்கள் சிலிக்கான் பேடில் உண்மையான பயனரின் கைரேகையின் குளோனை உருவாக்குகிறார்கள். நிலம் வாங்கும் போது கையொப்பமிட்ட ஆவணங்களில் இருந்து இந்த கைரேகையை  நில வருவாய்துறை இணையதளங்களில்  இருந்து எடுக்கின்றனர். அதே போல சிலர் சிம் கார்டினை வாங்க பயன்படுத்தப்படும் கைரேகைகளை பயன்படுத்தி இவ்வாறு  ஃபிஷ்ஷிங் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். 


எனவே இப்போது  ​​பிறப்பு மற்றும் இறப்பு விவரங்களை ஆதாருடன் இணைக்க UIDAI முடிவு செய்துள்ளது. புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு ஒரு தற்காலிக எண் ஒதுக்கப்படும், அது பயோமெட்ரிக் தரவு மூலம் மேம்படுத்தப்படும்.அதே போல தவறான  பயன்பாட்டைத் தடுக்க இறப்பு பதிவு பதிவுகள் ஆதாருடன் இணைக்கப்படும். தற்போது பயனர்களின் மொபைல் எண்கள், வங்கி கணக்குகள் மற்றும் நிதி திட்டங்களுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் மக்கள் தங்கள் பயோமெட்ரிக் தரவை தானாக முன்வந்து புதுப்பிக்க  வேண்டும் என UIDAI  திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.  தற்போது, ​​ஐந்து வயது முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆதாருக்கான பயோமெட்ரிக்ஸை புதுப்பிக்க வேண்டும்.


UIDAI-இன் அதிகாரி ஒருவர் கூறுகையில், பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தங்கள் பயோமெட்ரிக்ஸ், மக்கள்தொகை மற்றும் பிற தரவுகளைப் புதுப்பிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். குறிப்பிட்ட வயதிற்கு மேல் , அதாவது ஒரு 70 வயதிற்கு மேல் இதனை புதுப்பிக்க தேவையில்லை என தெரிவிக்கிறார்.




இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) மேகாலயா, நாகாலாந்து மற்றும் லடாக் ஆகிய நாடுகளில் ஒரு சிறிய சதவீத மக்களைத் தவிர்த்து, நாட்டில் உள்ள அனைத்து வயது வந்தோரையும்  இந்த லிஸ்டில் சேர்த்துள்ளது.UIDAI 50,000 க்கும் மேற்பட்ட பதிவு மையங்களைக் கொண்டுள்ளது மற்றும் 1.5 லட்சம் தபால்காரர்களை இந்த பணியில் இணைக்க முடிவு செய்துள்ளது. அவர்கள்  ஆதார் வைத்திருப்பவர்களின் மொபைல் எண்கள் மற்றும் முகவரிகளை புதுப்பிக்கும் வேலைகளை செய்வார்கள் என தெரிகிறது. நாட்டின் பல்வேறு இடங்களில் ஆதார் எண்ணுடன் , மொபைல் எண்ணை இணைக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.