கொடைக்கானல் கீழ் மலை கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கான காலாண்டு தேர்வு வினாத்தாள்கள் வத்தலகுண்டில் உள்ள ஒரு செல்போன் கடையில் வைக்கப்பட்டிருந்த விவகாரம் குறித்த வீடியோ காட்சி வெளியானதால் பரபரப்பானது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலை கிராமங்களில் செயல்படும் அரசு தொடக்கப்பள்ளில் நடைபெறும் காலாண்டு தேர்வு வினாத்தாள்கள் வத்தலகுண்டில் உள்ள ஒரு செல்போன் கடையில் வைக்கப்பட்டிருந்த விவகாரம் குறித்த தற்போது வீடியோ காட்சியுடன் அம்பலம் ஆகியுள்ளது.
கடந்த காலங்களில் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகள் தமிழகம் முழுவதும் பொது வினாத்தாள் அச்சடிக்கப்பட்டு தேர்வுகள் நடைபெற்றது. ஆனால் இந்த ஆண்டு நேரமின்மை காரணமாக நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு மாவட்ட அளவில் பொதுவான வினாத்தாளை மாவட்ட கல்வி அலுவலகம் தயாரித்து அதனை பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மையம் மூலம் பள்ளிகளுக்கு பிரித்து வழங்கும்படி பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டிருந்தது.
பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு.. பள்ளிக்கல்வித்துறை சொன்ன காரணம் இதுதான்!
இதில் எந்த குளறுபடியும் வராமல் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் கொடைக்கானல் மலை கிராமங்களுக்கு செல்ல உள்ள வினாத்தாள்கள் வத்தலக்குண்டில் உள்ள ஒரு தனியார் செல்போன் கடையில் கொடுக்கப்பட்டு அந்தந்த பகுதியில் உள்ள ஆசிரியர்களை அந்த கடையில் வந்து எடுத்துச் சொல்லுமாறு சொல்லப்பட்டுள்ளது. அரசு வினாத்தாள்கள் ஒரு தனியார் செல் கடையில் இருப்பதைக் கண்டு ஆசிரியர்களும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஷின்சோ அபேவின் இறுதிச்சடங்கு.. இருநாட்டு உறவு.. ஜப்பான் பிரதமரை சந்தித்தார் பிரதமர் மோடி..!
வினாத்தாளை பெற்றுச் சென்ற சில மலை கிராமம் ஆசிரியர்கள் அதில் பல வினாத்தாள்கள் இல்லாம இருப்பதை கண்டு திருப்பி அதே கடையில் சென்று கொடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இது சம்பந்தமாக தவறு செய்த கல்வி துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்