Whatsapp Feature: வாட்ஸ் அப்பில் எளிமையாக செசேஜ் (வீடியோ மெசேஜ்) அனுப்பும் வகையில், மெட்டா நிறுவனம் ஒரு புதிய வசதியை கொண்டு வந்துள்ளது. 


வாட்ஸ் அப்:


மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், போட்டி செயலிகளிடம் வீழ்வதை தவிர்க்கும் வகையிலும், பயனாளர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை வாரி வழங்கி  வருகின்றன. மெட்டா குழுமத்தின் வாட்ஸ்-அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக தொடர்ந்து அடுத்தடுத்து அப்டேட் மீது அப்டேட்டாக வழங்கி கொண்டிருக்கிறது. ஆனாலும்,  வாட்ஸ்-அப் செயலியை பயனாளிகள் மேலும் மேலும் எளிமையாக அணுகும் வகையில், அது தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.


புதிய வசதி: 


பொதுவாக நாம் ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் டெக்ஸ் அல்லது வாய்ஸ் நோட் மூலம் மெசேஜ்களை அனுப்பி வருகிறோம். இந்நிலையில், தற்போது மெசேஜ் அனுப்புவதற்கு மேலும் ஒரு புதிய வசதியை மெட்டா கொண்டு வந்துள்ளது. அதன்படி, 'Short Video Message’ என்ற புதிய அம்சத்தை மெட்டா கொண்டு வந்துள்ளது. இதன் மூலம், நாம் ஒருவருக்கு வீடியோ மூலம் நமது  தகவல்களை பகிர்ந்துக் கொள்ளலாம்.  Text Box என்ற ஆப்ஷனுக்கு அருகில் இருப்பதாகவும், இதனை பயன்படுத்தி பயனர்கள் 60 நிமிடங்கள் பேசி வீடியோவாக மற்றவர்களுக்கு அனுப்பி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த அம்சமானது ஒருவருக்கு நாம் டெக்ஸ்டாக அனுப்பும் நேரத்தை குறைப்பதோடு, எளிதாக புரியக்கூடிய வகையில் இருக்கும் தெரிகிறது.  தற்போது இந்த அம்சம் பீட்டா பயனர்களுக்கு மட்டுமே கிடைக்க பெற, விரையில் ஐஓஎஸ் பயனர்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பயன்படுத்துவது எப்படி?


ஆண்ட்ராய்ட் பயனாளர்கள் வாட்ஸ்-அப் செயலியில் ஒருவடைய சாட் பேஜ்க்கு சென்று ’video message' என்கிற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர், அதனை 60 நிமிடங்கள் பேசி வீடியோவாக மற்றவர்களுக்கு பகிர்ந்துகொள்ளலாம். இதன்படியே, தொடர்ந்து, எளிமையாக குறுந்தகவல் அனுப்பி, கலந்துரையாடலாம். அதாவது, ஏற்கனவே எப்படி ஃபேஸ்புக் போன்ற செயலியில் இருக்கிறதோ, அதேபோன்று இனி வாட்ஸ்-அப் செயலியில் பயனாளர்கள் வீடியோ பதிவின் மூலம் மற்றவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம்.


ஐஓஎஸ் பயனாளர்களும் மேலே குறிப்பிட்ட அதே முறையை பின்பற்றி, மொபைலில் வீடியோ மெசேஜ்களை அனுப்பி பயனாளருடன் கலந்துரையாடலாம்.


குவியும் அப்டேட்கள்: 


நாளுக்கு நாள் மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் ஒரு புதிய அப்டேட்டை கொண்டு வருகிறது. அதன்படி, சமீபத்தில் பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், போன் நம்பர் பிரைவசி (Phone Number Privacy) என்ற புதிய அம்சத்தை மெட்டா அறிமுகப்படுத்தியது.


இந்த அம்சமானது வாட்ஸ் ஆப் குழுக்களில் புதிதாக இணையும் பயனர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும். வாட்ஸ் ஆப் குரூப்பில் இருக்கும் பயனர்களின் மொபைல் நம்பரை இந்த அம்சம் மூலம் மறைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


இதையும் படிங்க..


DD Returns Review: சிரிப்பு சரவெடி.. பேய் கதையில் மீண்டும் வென்ற சந்தானம்.. டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் விமர்சனம் இதோ..!


LGM Movie Review: தோனியின் முதல் தயாரிப்பு.. எல்.ஜி.எம் படம் சூப்பரா? ... சுமாரா? .. முழு விமர்சனம் இதோ..!