WhatsApp Update: உலகம் முழுக்க பரவலாக பயன்படுத்தப்படும் செயலி வாட்ஸ்-அப் . பிரபல மேட்டா (ஃபேஸ்புக் ) நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்-அப்தான் அதிக பயனாளர்களை கொண்ட குறுஞ்செய்தி அனுப்பும் தொழில்நுட்பமாக பார்க்கப்படுகிறது.  டெக்ஸ்ட் மெசேஜ் மட்டுமே அனுப்பும் வகையில் அறிமுகமான வாட்ஸப் இன்று பல மாற்றங்களையும் வசதிகளையும் கொண்டுள்ளது. அந்த வரிசையில், 2022ம் ஆண்டில் அடுத்தடுத்து சில அப்டேட்டுகளை அறிவித்து வருகிறது.


இந்நிலையில், அதிக பயன்பாட்டாளர்களை கொண்ட வாட்ஸ் அப் நிறுவனம், 2021-ம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் மட்டும் 20 லட்சம் கணக்குகளை முடக்கியுள்ளது. இந்திய அரசாங்கத்தின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, பிரபல மெசேஜிங் நிறுவனங்கள் அனைத்தும் மாதந்தோறும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். விதிகளை மீறும் வாட்ஸ் அப் கணக்குகளை, பாதுகாப்பு நெறிமுகளுக்காக என சுட்டிக்காட்டி அந்நிறுவனம் முடக்கி வருகிறது. வாட்ஸ் அப்பில் ‘ரிப்போர்ட்’ ஆப்ஷனைப் பயன்படுத்தி பயனாளர்கள் புகார் அளிக்கும் கணக்குகளையும் வாட்ஸ் அப் நிறுவனம் சோதனை செய்து முடக்குகிறது.


மேலும் படிக்க: WhatsApp Update: புதிய அப்டேட்... புதிய அறிவிப்பு... வாட்ஸ் அப் க்ரூப்பில் சேரும் ஈஸி வழி.. செம்ம அப்டேட்ஸ்..


2021-ம் ஆண்டு, மாதம் வாரியாக முடக்கப்பட்ட வாட்ஸ்-அப் கணக்குகள்


மே 15 - ஜூன் 15: 20,11,000 கணக்குள் முடக்கம்


ஜூன் 16 - ஜூலை 31: 30,27,000 கணக்குகள் முடக்கம்


ஆகஸ்ட் 1 - ஆகஸ்ட் 31: 20,70,000 கணக்குகள் முடக்கம்


செப்டம்பர் 1 - செப்டம்பர் 31: 22,09,000 கணக்குகள் முடக்கம்


அக்டோபர் 1 - அக்டோபர் 31: 20,69,000 கணக்குகள் முடக்கம்


நவம்பர் 1 - நவம்பர் 31: 17,59,000 கணக்குகள் முடக்கம்


டிசம்பர் 1 - டிசம்பர் 31: 20,79,000 கணக்குகள் முடக்கம்


இதனால், கடந்த ஆண்டு மே மாதம் முதல் டிசம்பர் வரை மட்டும் 1,52,24,000 கணக்குகளை வாட்ஸ் அப் நிறுவனம் முடக்கியுள்ளது. தனிநபர் உரிமையை மீறாமல் விதிமுறைகளை மீறும் கணக்குகளை மட்டும் தேர்வு செய்து வாட்ஸ் அப் நிறுவனம் முடக்கி வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க: “உன் கோவத்தை கோலியிடம் காட்டு...” அட்வைஸ் பண்ண வெட்டோரி; நினைவு கூறும் சாஹல்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண