WhatsApp Update: உலகம் முழுக்க பரவலாக பயன்படுத்தப்படும் செயலி வாட்ஸ்-அப் . பிரபல மேட்டா (ஃபேஸ்புக் ) நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாட்ஸ்-அப்தான் அதிக பயனாளர்களை கொண்ட குறுஞ்செய்தி அனுப்பும் தொழில்நுட்பமாக பார்க்கப்படுகிறது. டெக்ஸ்ட் மெசேஜ் மட்டுமே அனுப்பும் வகையில் அறிமுகமான வாட்ஸப் இன்று பல மாற்றங்களையும் வசதிகளையும் கொண்டுள்ளது. அந்த வரிசையில், 2022ம் ஆண்டில் சில அப்டேட்களை அறிவித்திருக்கிறது. அதன் ஒரு பகுதியாக, வாட்ஸ் அப் க்ரூப் சாட் பயன்படுத்துபவர்களுக்கு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது அந்நிறுவனம்.
வழக்கமாக, வாட்ஸ்-அப் க்ரூப்பில் ஒருவரை இணைக்க வேண்டுமென்றால், அந்நபரின் அழைப்பு எண்ணை மொபைல் போனில் பதிவு செய்திருக்க வேண்டும். தெரியாத நபர்களை க்ரூப்பில் சேர்க்க வேண்டுமென்றால். ஒவ்வொரு முறையும் அந்நபரின் மொபைல் எண்ணை மொபைல் போனில் பதிவு செய்வது சவாலானதாக இருக்கும். இனிமேல், வாட்ஸ் அப் க்ரூப்பில் சேர்க்க இருக்கும் நம்பரை மொபைல் போனில் பதிவு செய்யாமலே, நேரடியாக வாட்ஸ் அப் க்ரூப்பில் சேர்க்கலாம். க்ரூப் அழைப்பின் லிங்க்-ஐ ஒருவருக்கு அனுப்பினாலே, அவர் அதை ஏற்று க்ரூப்பில் இணையலாம்.
வாஸ்ட் அப் குரூப்பிற்கு அழைப்பு விடுக்கும் முறை:
1. வாட்ஸ் அப் செயலியை ஒபன் செய்து, க்ரூப் சாட்டை ஓபன் செய்யவும்
2. நம்பரை சேர்க்க இருக்கும் க்ரூப் லிங்க்-ஐ எடுத்து கொள்ளவும்
3. இந்த லிங்க்கை க்ரூப்பில் சேர இருப்பவர்களுக்கு அனுப்பலாம்
இது மட்டுமின்றி, வாட்ஸ் அப் குரூப் அட்மின் அனைவருக்கும் குறுஞ்செய்திகளை நீக்க அனுமதிக்கும் (delete messages for everyone) அம்சத்தை விரைவில் பெறுவதற்கான சோதனை முயற்சியில் இருப்பதாக பிரபல வாட்ஸப் பீட்டா செய்தி ஒன்றை வெளியிட்டது. இப்படி, வாட்ஸ் அப் க்ரூப் பயன்படுத்துவதற்காக பல புதிய அப்டேட்டுகள் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்