தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளுடைய பதவிக்காலம் முடிவடைந்தும் நீண்ட காலம் அவற்றுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்த சூழலில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுமென தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அதனையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான கூட்டணிகள் அரசியல் கட்சிகளிடம் இறுதியாகி, விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. நாளை வேட்புமனு தாக்கல் முடிவடைய உள்ளது. இந்நிலையில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க, காங்கிரஸ், மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சிகள், சுயேட்சைகள் என வேட்பாளர்கள் விறுவிறுப்பாக காலை முதலே வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ஒருவர் கை பக்குவத்தில் ஊரே சமைக்கும் எண்ணெய் சுக்கா! இது தான் மதுரையோடு பக்கா!